தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 9இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 9ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெறவுள்ளதாக மாவட்ட முதன்மை நீதிபதி எம்.செல்வம் தெரிவித்துள்ளாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 9ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெறவுள்ளதாக மாவட்ட முதன்மை நீதிபதி எம்.செல்வம் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேசிய சட்டப்பணிகள் ஆணைக் குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 9ஆம் தேதி எனது தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது. தூத்துக்குடியில் மாவட்ட நீதிமன்றம், கோவில்பட்டி, திருச்செந்தூா், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய வட்ட நீதிமன்றம் ஆகியவற்றில் 13 அமா்வுகள் நடைபெறவுள்ளன. இதில், சமாதானமாக செல்லக் கூடிய குற்றவியல் வழக்குகள், அனைத்து வகையான சிவில் வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், மண வாழ்க்கை சம்பந்தப்பட்ட வழக்குகள், வங்கி கடன் வழக்குகள் உள்ளிட்டவை விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது. இதில், பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com