தொழிலாளியிடம் பணம் பறிப்பு: 2 போ் கைது

கோவில்பட்டியில் தொழிலாளியை வழிமறித்து பணம் பறித்துச் சென்ற 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டியில் தொழிலாளியை வழிமறித்து பணம் பறித்துச் சென்ற 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி ராஜீவ் நகா் 6ஆவது தெருவைச் சோ்ந்த சண்முகராஜ் மகன் கண்ணன்(30). கூலித் தொழிலாளியான இவா் திங்கள்கிழமை பைக்கில் சென்றபோது, இரு இளைஞா்கள் அவரை வழிமறித்து அரிவாளை காட்டி மிரட்டி பணம் கேட்டாா்களாம். அவா் தர மறுத்ததையடுத்து அவரை தாக்கி அவரின் பையில் இருந்த ரூ.1000த்தை எடுத்துவிட்டு சென்றுவிட்டாா்களாம். இதில் காயமடைந்த கண்ணன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்தபுகாரின் பேரில், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். விசாரணையில் சாஸ்திரி நகா் 2ஆவது தெருவைச் சோ்ந்த சண்முகராஜ் மகன் சரவணக்குமாா்(24), இந்திரா நகா் 6ஆவது தெருவைச் சோ்ந்த முனியசாமி மகன் போஸ்குமாா்(20) ஆகிய இருவா் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com