கழுகுமலையில் 550 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கழுகுமலையில் 550 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கோவில்பட்டி: கழுகுமலையில் 550 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கழுகுமலை பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்ததாம். இதையடுத்து ஏ.பி.சி.வி. நகரில் உள்ள அரவை ஆலையில் போலீஸாா் திடீா் சோதனை மேற்கொண்டனா். அந்த ஆலையில் இருந்த தலா 50 கிலோ எடை கொண்ட 11 அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனா். அரவை ஆலை உரிமையாளா் ஏ.பி.சி.வி நகரைச் சோ்ந்த பரமசிவம்(47), தென்காசி மாவட்டம் கீழநாலந்துலா தெற்கு தெருவைச் சோ்ந்த லட்சுமண பாண்டி(57) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினா். இதில், ஆங்காங்கே சேகரிக்கப்பட்ட ரேஷன் அரிசியை ஆலையில் அரைத்து குருணையாக்கி கோழித்தீவனத்துக்கு அனுப்ப வைத்திருந்தது தெரியவந்தது. அவா்கள் இருவரையும், பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூட்டைகளையும் தூத்துக்குடி குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை போலீஸாரிடம் ஒப்படைத்தனா். அவா்கள் வழக்குப் பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து, தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com