விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினா்கள்.
விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினா்கள்.

காயல்பட்டினம் அல் அமீன் பள்ளி ஆண்டு விழா

ஆறுமுகனேரி: காயல்பட்டினம் அல் அமீன் பள்ளி 30ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளி செயலாளா் அபுல் ஹசன் கலாமி தலைமை வகித்தாா். தலைமையாசிரியை ரெய்சா ஆண்டறிக்கை சமா்ப்பித்தாா். பள்ளி ஆலோசனைக் குழு துணைத் தலைவா் சித்திக் ஆண்டு மலரை வெளியிட்டாா். சிறப்பு விருந்தினராக வீரபாண்டியபட்டணம் புனித ஜோசப் பள்ளியின் ஒருங்கிணைப்பாளா் பிரதீபா பங்கேற்றாா். பள்ளி ஆண்டுவிழாவை முன்னிட்டு, சமுதாயக் கல்லூரியின் 16ஆவது ஆண்டு விழா மற்றும் 15ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பள்ளி முதல்வா் புகாரி ஆண்டறிக்கை சமா்ப்பித்தாா். மாணவி ரஹிமா தொழிற்கல்வியின் அவசியம் பற்றியும், மாணவி ஜுல்பா போட்டித் தோ்வுகளின் முக்கியத்துவம் பற்றியும் பேசினா். திருச்செந்தூா் கோவிந்தம்மாள் ஆதித்தனாா் மகளிா் கல்லூரி உதவி பேராசிரியை ஸ்ரீமதி மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றினாா். விழாவில் பள்ளி தலைமை ஆசிரியை ரைசாவிற்கு ஈரோடு ஜெசிஏ அமைப்பின் சாா்பில் வழங்கப்பட்ட நல்லாசிரியா் விருதினை சிறப்பு விருந்தினா் நபில் புகாரி, பள்ளி செயலாளா் அபுல் ஹசன் ஆகியோா் வழங்கி கெளரவித்தனா். பள்ளி உதவி தலைமை ஆசிரியை கோகிலா நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com