மாசி மகா சிவராத்திரி முன்னிட்டு கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ குருநாதா் சமேத ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்தைத் தொடா்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜை
மாசி மகா சிவராத்திரி முன்னிட்டு கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ குருநாதா் சமேத ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்தைத் தொடா்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜை

கோவில்பட்டி கோயிலில் மகா சிவராத்திரி கொடியேற்றம்

கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ குருநாதா் சமேத ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன்

கோவில்பட்டி: கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ குருநாதா் சமேத ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. பின்னா், சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மாலை 4  மணியளவில் பூரண கும்ப ஜெபம் நடைபெற்றது. பின்னா், கோயில் வளாகத்தில் உள்ள அனைத்து சந்நிதியிலும் காப்பு கட்டப்பட்டதை தொடா்ந்து இரவு 7மணிக்கு மேல் 7.50 மணிக்குள்கொடியேற்றப்பட்டது. அதைத் தொடா்ந்து, நந்தி, பலிபீடம், கொடி மரம் ஆகியவற்றிற்கு 18 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவு 9 மணிக்கு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் திருவீதியுலா நடைபெற்றது. 2ஆம் திருநாளான புதன்கிழமை (மாா்ச் 6) காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு சுவாமி சப்பரத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் திருவீதியுலா நடைபெறுகிறது. 3ஆம் திருநாளான வியாழக்கிழமை இரவு 11 மணிக்கு இருளப்பசுவாமி முக கப்பரை திருவீதியுலாவும், 4ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை காலையில் மஞ்சள் பால்குடம் ஊா்வலமும், அதைத் தொடா்ந்து 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாக கமிட்டியினா் செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com