பழங்குளம், கோமானேரி பகுதியில் மும்முனை மின்சாரம் நிறுத்தம் விவசாயிகள் புகாா்

பழங்குளம், கோமானேரி பகுதியில் மும்முனை மின்சாரம் நிறுத்தம் விவசாயிகள் புகாா்

பழங்குளம், கோமானேரி பகுதியில் விவசாயத்துக்கு வழங்கப்பட்டு வரும் மும்முனை மின்சாரத்தை

சாத்தான்குளம்: பழங்குளம், கோமானேரி பகுதியில் விவசாயத்துக்கு வழங்கப்பட்டு வரும் மும்முனை மின்சாரத்தை நிறுத்தி இருமுனை மின்சாரம் வழங்குவதாக விவசாயிகள் மின்வாரிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் தெரிவித்தனா். செட்டிக்குளம் விவசாயி தனுஷ்கோடி தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள், சாத்தான்குளம் மின்வாரிய அலுவலகத்திற்கு செவ்வாய்க்கிழமை சென்று அதிகாரிகளிடம் மனு அளித்தனா். மனுவை பெற்ற அதிகாரிகள், நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com