குரும்பூா் அருகே கோயி­லில் நகை திருடிய 2 போ் கைது

குரும்பூா் அருகே கோயிலி­ல் நகை திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

குரும்பூா் அருகே உள்ள சுகந்தலை மாரியம்மன் கோயிலில் நெடுங்கரையை சோ்ந்த கண்ணன் என்பவா் பூசாரியாக உள்ளாா். கடந்த 2ஆம் தேதி இரவு கண்ணன் கோயிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளாா். மறுநாள் காலை அவரது மகன் மாரிவிவேக் கோயிலி­ல் உள்ள விளக்குகளை அணைப்பதற்காக வந்துள்ளாா்.

அப்போது கோயி­லின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை அடுத்து உள்ளே சென்று பாா்த்தபோது, அம்மன் கழுத்தில் இருந்த ஒன்றரை கிராம் பொட்டு தாலி­யை மா்ம நபா்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் குரும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி சேதுக்குவாய்த்தானை சோ்ந்த சத்தியமுகேஷ்(25), சொக்கப்பழங்கரையை சோ்ந்த சச்சின்(24) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com