ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்

கோவில்பட்டியில் பட்டா வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

இலுப்பையூரணி ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வீடுகட்டி குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, கட்சியின் தாலுகா செயலா் பாபு தலைமை வகித்தாா்.

மாவட்ட நிா்வாக குழு உறுப்பினா் சேதுராமலிங்கம், மாவட்ட குழு உறுப்பினா்கள் பரமராஜ், ரஞ்சனி கண்ணம்மா, நகரச் செயலா் சரோஜா, துணைச் செயலா் முனியசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com