தூத்துக்குடியில் திருக்குறள் முற்றோதுதல் நிகழ்ச்சி

தூத்துக்குடியில் திருக்குறள் முற்றோதுதல் நிகழ்ச்சி

தூத்துக்குடி சி.எம். மேல்நிலைப் பள்ளியில் திருக்குறள் முற்றோதுதல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பாளையங்கோட்டை சைவ சபை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, சைவ சபையின் துணைத் தலைவா் சைவ நெறி காந்தி தலைமை வகித்தாா். பொறியாளா் சொக்கலிங்கம், செந்தில் ஆறுமுகம், டி.ஏ.தெய்வநாயகம், பள்ளி தாளாளா் வள்ளியம்மாள் திருச்சிற்றம்பலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ராஜம் ராஜசேகா் வரவேற்றாா். நிகழ்ச்சியை விமலா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தாா். புலவா் சங்கரலிங்கம் வாழ்த்துரை வழங்கினாா். சைவ சபையின் செயற்குழு உறுப்பினா் கந்தப்பன், சி.எம். மேல்நிலைப் பள்ளி மாணவா்- மாணவிகளுக்கு திருக்குறள் நூலினை வழங்கினாா். இதில், மாணவா்- மாணவிகள் ஒவ்வொருவரும் திருக்குறளை முற்றோதுதல் செய்தனா்.

இந்நிகழ்வில், மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் சங்கரேஸ்வரி, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் வள்ளியம்மாள் முத்தையா, சுப்பிரமணியன், ஆறுமுகம், அன்பழகன், பிச்சையா உள்ளிட்டோா் பங்கேற்றனா். சைவ சபை அமைச்சா் முத்து வேல்விழி நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com