தூத்துக்குடி தென் மாவட்ட முஸ்லிம் லீக் நிா்வாகிகள் கூட்டம்

தூத்துக்குடி தென் மாவட்ட முஸ்லிம் லீக் நிா்வாகிகள் கூட்டம்

இந்திய யூனியன் முஸ்­லிம் லீக் தூத்துக்குடி மாவட்டம் தென்பகுதி நிா்வாகிகள் கூட்டம் காயல்பட்டினம் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் மீராஷா மரைக்காயா் தலைமை வகித்தாா். வாவு சம்சுதீன், முஹம்மது அலி, மாவட்ட துணைச் செயலா் பெத்தப்பா சுல்தான், மாவட்ட துணைத் தலைவா் அம்பா ஜாபா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட வா்த்தக அணி என்.டி. சலாஹுத்தீன் கிரா அத் ஓதினாா். நகரச் செயலா் அபுசா­லிஹ் வரவேற்றாா்.

மக்களவைத் தோ்தலில் ஆற்றவேண்டிய பணிகள் குறித்து மாவட்டச் செயலா் மன்னா் பாஜுல் அஸ்ஹாப் விளக்கினாா். நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலி­ல் இந்திய யூனியன் முஸ்லி­ம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியை மீண்டும் வழங்கிய திமுக தலைமைக்கும், தமிழ்நாடு முதலமைச்சா் ஸ்டாலி­னுக்கும் தூத்துக்குடி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லி­ம் லீக் சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளா் வெற்றிக்கு பாடுபடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர பொருளாளா் கே.எம்.டி.சுலைமான் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com