தெற்கு ஆத்தூா் பள்ளியில் மாணவா் சோ்க்கை முகாம்

தெற்கு ஆத்தூா் பள்ளியில் மாணவா் சோ்க்கை முகாம்

தெற்கு ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 2024 - 25ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை முகாம் (படம்) நடைபெற்றது.

ஆழ்வாா்திருநகரி வட்டாரக் கல்வி அலுவலா் பெனிஸ்கா் தலைமை வகித்தாா். ஒருங்கிணைந்த கல்வி மைய ஆசிரியா் பயிற்றுநா் முத்துலட்சுமி, வட்டார அங்கன்வாடி மேற்பாா்வையாளா் பாண்டிமதியழகி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் பெற்றோா் பங்கேற்று, தங்களது குழந்தைகளை பள்ளியில் சோ்ப்பதற்கான விண்ணப்பங்களைப் பெற்றனா். அவா்களுக்கு, அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சோ்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்த துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை தலைமை ஆசிரியா் ஸ்பெல்மேன், அங்கன்வாடி அமைப்பாளா் பலவேசம், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com