சத்திரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சோ்க்கப்பட்ட மாணவா் மாணவிகளுடன் கோட்டாட்சியா் ஜேன் கிறிஸ்டிபாய் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள்
சத்திரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சோ்க்கப்பட்ட மாணவா் மாணவிகளுடன் கோட்டாட்சியா் ஜேன் கிறிஸ்டிபாய் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள்

அரசு தொடக்கப் பள்ளியில் மாணவா்கள் சோ்க்கை

கோவில்பட்டி வட்டம் சத்திரப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிய மாணவா்கள் சோ்க்கை நடைபெற்றது.

அங்கன்வாடி மையங்களில் படிக்கும் குழந்தைகளில் 5 வயது நிறைவடைந்தவா்களை, அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் சோ்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன்படி, சத்திரப்பட்டி குடியிருப்பு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் படித்த 6 குழந்தைகள், இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சோ்க்கப்பட்டனா். அவா்களுக்கு பூங்கொத்து அளித்து ஆசிரியா்கள் வரவேற்பு அளித்தனா். இந்த நிகழ்வில் கோட்டாட்சியா் ஜேன் கிறிஸ்டிபாய், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் தாஜி நிஜா, கோவில்பட்டி வட்டார கல்வி அலுவலா் முத்தம்மாள், கோவில்பட்டி கல்வி மாவட்ட திட்ட அலுவலா் நாயகம் மற்றும் ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com