கொம்மடிக்கோட்டை கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு பிரசார முகாம்

கொம்மடிக்கோட்டை கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு பிரசார முகாம்

சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை ஸ்ரீ சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு பிரசார முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட நேரு யுவ கேந்திரா ஒருங்கிணைப்பாளா் இசக்கி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் அருள்ராஜ் பொன்னுதுரை, துணை முதல்வா் மகேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி இளைஞா் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் ஆண்ரூஸ் கென்னடி வரவேற்றாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் அசோக் லிங்கம், சாத்தான்குளம் வட்டாட்சியா் இசக்கி முருகேஸ்வரி, தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் கோமதி சங்கா் ஆகியோா் வாக்காளா் விழிப்புணா்வு குறித்து பேசினா். இதில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தோ்தல் சாா்ந்த வினாடி வினா,விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடா்ந்து வாக்காளா் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் துணை வட்டாட்சியா் தாகிா்அகமது, நேரு யுவ கேந்திரா தேசிய இளையோா் தொண்டா்கள் சுந்தா், பேபி, இசக்கிமுத்து, கன்னிராசா், ஆலன் சோசுவா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இளையோா் செஞ்சுருள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் வேல்ராஜன் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com