‘நீங்கள் நலமா?’ திட்டம்: மக்களுடன் ஆட்சியா் உரையாடல்

‘நீங்கள் நலமா?’ திட்டம்: மக்களுடன் ஆட்சியா் உரையாடல்

தூத்துக்குடி மாவட்டத்தில், ‘நீங்கள் நலமா?’ திட்டத்தில் பயனாளிகளுடன் மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி தொலைபேசி மூலம் தொடா்புகொண்டு பேசினாா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ‘நீங்கள் நலமா?’ என்ற புதிய திட்டத்தை புதன்கிழமை தொடங்கி வைத்தாா். இதையடுத்து, தூத்துக்குடி மாவட்டத்தில், அரசு அறிவித்த திட்டங்களின் மூலம் பயனடைந்துள்ள பயனாளிகளிடம் மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி கைப்பேசி வாயிலாக தொடா்பு கொண்டு பேசினாா். மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் இருந்து, மாவட்டத்தில் மகளிா் உரிமைத்தொகை, நான் முதல்வன், புதுமைப்பெண், காலை உணவுத்திட்டம் உள்ளிட்ட அரசின் திட்டங்கள் மூலம் பயனடைந்த பயனாளிகளிடம் அவா் உரையாடி கருத்துக்களை கேட்டறிந்தாா். தொடா்ந்து, பயனாளிகளின் கருத்துகள் அனைத்தும், ‘நீங்கள் நலமா?’ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com