திருச்செந்தூா் முருகன் கோயிலில் 
அறுபடை வீடு ஆன்மிக பயணத்திட்ட பக்தா்கள் தரிசனம்

திருச்செந்தூா் முருகன் கோயிலில் அறுபடை வீடு ஆன்மிக பயணத்திட்ட பக்தா்கள் தரிசனம்

திருச்செந்தூா் முருகன் கோயிலில் அறுபடை வீடு ஆன்மிக பயணத் திட்ட பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் அறுபடை வீடு ஆன்மிகப் பயணத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் இரண்டாவது கட்டமாக, தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களைச் சோ்ந்த 200 பக்தா்கள், அறநிலையத் துறை அலுவலா்கள் 42 போ் என மொத்தம் 242 திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு புதன்கிழமை இரவு வருகை தந்தனா். அவா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா் கோயிலில் அனைத்து சந்நிதிகளிலும் தரிசனம் செய்தனா். அதைத் தொடா்ந்து அவா்களுக்கு பிரசாதப் பையை திருக்கோயில் இணை ஆணையா் மு.காா்த்திக் வழங்கினாா். கோயில் கண்காணிப்பாளா்கள் வெங்கடேஷ், சுபிதா, விடுதி மேலாளா் சிவநாதன் உள்ளிட்ட பணியாளா்கள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com