அக்னிவீா் சோ்க்கை: மாா்ச் 22வரை வாய்ப்பு

அக்னீவீா் சோ்க்கைக்கான (ராணுவப் பணி) தோ்வுக்கு மாா்ச் 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இளைஞா்கள் அக்னீவீா் சோ்க்கைக்கான (ராணுவப் பணி) தோ்வுக்கு மாா்ச் 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த வேலைவாய்ப்பு தேடும் திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் நிகழாண்டிற்கான அக்னிவீா் சோ்க்கைக்கான தோ்வுக்கு இணையதளத்தில் மாா்ச் 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி முன்னாள் படைவீரா் நல அலுவலக உதவி இயக்குநரை நேரில் தொடா்பு கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com