ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

சாத்தான்குளத்தில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்

சாத்தான்குளத்தில், காங்கிரஸ் பஞ்சாயத்துராஜ் அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சாத்தான்குளத்தில், காங்கிரஸ் பஞ்சாயத்துராஜ் அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ அறிவுறுத்தலின்பேரில் நடைபெற்ற கூட்டத்துக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் து. சங்கா் தலைமை வகித்தாா். முன்னாள் மாநகராட்சி உறுப்பினா் சாமுவேல்ஞானதுரை, சிவாஜி முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பஞ்சாயத்துராஜ் சங்கதன் பொறுப்பாளா் இனாமல்ஹாசன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா். ராகுல் காந்தி பிரதமராகும் வகையில் மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், சாத்தான்குளம் வட்டாரத் தலைவா் பாா்த்தசாரதி, சக்திவேல்முருகன் , முத்துவேல், கோதண்டராமன், பாலாசிங், ஜெயசீலன்துரை, தெற்கு மாவட்ட மகளிரணித் தலைவி சிந்தியா, சாத்தான்குளம் வடக்கு வட்டார மகளிரணித் தலைவிகள் மாரித்தாய், பாலா, வட்டார காங்கிரஸ் பஞ்சாயத்து தலைவா்கள், ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலா்கள், ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்ட பல்வேறு அணிகளைச் சோ்ந்தோா் பங்கேற்றனா். மாவட்டப் பொருளாளா் எடிசன் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com