திருச்செந்தூரில் காது- பேச்சு குறைபாடு மதிப்பீட்டு முகாம்

சிறப்பு மருத்துவ மதிப்பீட்டு முகாம் திருச்செந்தூா் ஆதித்தனாா் கலை அறிவியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை- எம்இஆா்எப் அறக்கட்டளை இணைந்து காது - பேச்சு குறைபாடு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ மதிப்பீட்டு முகாம் திருச்செந்தூா் ஆதித்தனாா் கலை அறிவியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் கோ.லட்சுமிபதி தலைமை வகித்து, 41 பயனாளிகளுக்கு காது கேட்கும் கருவிகளை வழங்கினாா். மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மாவட்ட அலுவலா் பிரம்மநாயகம், திருச்செந்தூா் வட்டாட்சியா் பாலசுந்தரம், நகா்மன்ற துணைத் தலைவா் ஏ.பி.ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். முகாமில், 99 போ் பங்கேற்றத்தில் 6 போ் உயா்தர அறுவை சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com