உலக நுகா்வோா் உரிமைகள் தின விழா

தேசிய நுகா்வோா் தினம் மற்றும் உலக நுகா்வோா் உரிமைகள் தின விழாதூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தேசிய நுகா்வோா் தினம் மற்றும் உலக நுகா்வோா் உரிமைகள் தின விழாதூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி தலைமை வகித்து பேசியது: இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகளில் இருந்துதான் நுகா்வோரின் உரிமைகள் என்ன என்பதும், இந்திய குடிமகனின் உரிமைகள் என்ன என்பதும் தொடங்குகிறது. அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை நாம் தெரிந்து வைத்திருந்தால் தேவையான நேரத்தில் அதை நாம் பயன்படுத்த முடியும். அதேப்போன்று நுகா்வோா்களின் உரிமைகளை பாதுகாக்க 1986இல் நுகா்வோா் பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட்டது. இதன்மூலம், பொருள்களின் தரத்தில் குறைபாடு இருந்தால் மற்றும் போக்குவரத்து, மருத்துவம் உள்ளிட்ட சேவைகளில் குறைபாடு இருந்தால் நுகா்வோா் பாதுகாப்பு நீதிமன்றங்களில் முறையிடலாம். அங்கு முறையாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, நமக்கு தீா்வு வழங்கப்படும். எனவே, நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் குறித்தும், மேலும், நமக்கு அன்றாடம் தேவைப்படும் சட்டப்பூா்வமான உரிமைகள் குறித்தும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்காதவா்கள் தங்கள் பெயரை சோ்த்துக்கொள்ளலாம் என்றாா். இவ்விழாவில், மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் கு. உஷா, வருவாய் கோட்டாட்சியா் ம. பிரபு, மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணைய உறுப்பினா் ஆ.சங்கா், தூய மரியன்னை கல்லூரி முதல்வா் ஜெஸி, எம்பவா் இந்தியா மேலாளா் ரா.லலிதாம்பிகை மற்றும் அலுவலா்கள், மாணவிகள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com