கோ.வெ.நா. கல்லூரியில் இலவச கண் சிகிச்சை முகாம்

கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி, கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவமனைசாா்பில் இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது.

கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி, கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவமனைசாா்பில் இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது. இம்முகாமுக்கு, கல்லூரி செயலா் மகேந்திரன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் (பொ) சுப்புலட்சுமி, சுயநிதி பாடப்பிரிவுகளின் இயக்குநா் வெங்கடாசலபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி( பொறுப்பு) ஹரிணி கிருஷ்ணா தலைமையிலான மருத்துவக் குழுவினா் முகாமில் பங்கேற்ற 397 பேருக்கு கண் பரிசோதனை மேற்கொண்டனா். இதில் 35 போ் அறுவை சிகிச்சைக்கு தோ்ந்தெடுக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கல்லூரி சமூகப் பொறுப்பு கழக ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா்கள் சிவராமசுப்பு, சரவணகுமாா், ராதாகிருஷ்ணன் ஆகியோா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com