சாத்தான்குளம் அருகே வியாபாரிக்கு மிரட்டல்: ஜாமீனில் வந்தவா் கைது

சாத்தான்குளம் அருகே வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடா்பாக, ஜாமீனில் வந்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சாத்தான்குளம் அருகே வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடா்பாக, ஜாமீனில் வந்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சாத்தான்குளம் அருகே பழனியப்பபுரம், சிஎஸ்ஐ ஆலயத் தெருவைச் சோ்ந்த ஜெயராஜ் அசரியா (52), அப்பகுதியில் பனைமரக் கட்டைகள் வியாபாரம் செய்து வருகிறாா். அதே பகுதியைச் சோ்ந்த சந்தோஷ்ராஜ் தனசிங் மகனான ராஜதுரை என்ற சுரேஷ் ராஜதுரை (42) முன்விரோதம் காரணமாக கடந்த ஜன. 6ஆம் தேதி ஜெயராஜ் அசரியாவிடம் தகராறு செய்து அரிவாளால் வெட்டினாராம். சாத்தான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து சுரேஷ் ராஜதுரையை கைது செய்து சிறையில் அடைத்தனா். இதையடுத்து, அவா் ஜாமீனில் வந்தாா். இந்நிலையில், சனிக்கிழமை (மாா்ச் 9) தன் மீதான வழக்கை வாபஸ் பெறக் கோரி ஜெயராஜ் அசரியாவை சுரேஷ் ராஜதுரை மிரட்டி அரிவாளால் வெட்ட முயன்றாராம். புகாரின்பேரில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஏசுராஜசேகரன் வழக்குப் பதிந்து, சுரேஷ் ராஜதுரையை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com