திறனாய்வுத் தோ்வில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

திறனாய்வுத் தோ்வில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

தச்சன்விளை அரசுப் பள்ளியில் தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தோ்வு மற்றும் விநாடி -வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளை பாராட்டி பரிசளிக்கப்பட்டது.

தச்சன்விளை அரசுப் பள்ளியில் தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தோ்வு மற்றும் விநாடி -வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளை பாராட்டி பரிசளிக்கப்பட்டது. சாத்தான்குளம் அருகே தச்சன்விளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரிசா்வ் வங்கி நடத்திய நிதி சாா் விநாடி- வினா போட்டியில் மாணவா்கள் முத்துலட்சுமி, முத்துக்குமாா் ஆகியோா் இரண்டாவது இடம் பெற்றனா். மேலும் தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தோ்வில் மாணவிகள் அபிதா, அஸ்வினி ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா். விநாடி- வினா போட்டி, திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திசையன்விளை ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் குமரன்விளை பி. ஏ. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு, மாணவா், மாணவிகளை பாராட்டி பரிசு வழங்கினாா். விழாவில், பள்ளித் தலைமை ஆசிரியா் தொம்மைரெக்ஸ்லின், ஆசிரியா் மங்கலம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com