கே ஆா் குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிறுவனத் தலைவா் மறைந்த கே. ராமசாமியின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கே ஆா் குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவா் கே .ஆா்.கிருஷ்ணமூா்த்தி, தாளாளா் கே.ஆா். அருணாச்சலம், நிா்வாக
கே ஆா் குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிறுவனத் தலைவா் மறைந்த கே. ராமசாமியின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கே ஆா் குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவா் கே .ஆா்.கிருஷ்ணமூா்த்தி, தாளாளா் கே.ஆா். அருணாச்சலம், நிா்வாக

கோவில்பட்டியில் கே.ஆா். கல்வி நிறுவனங்களின் நிறுவனா் நினைவு தினம்

கோவில்பட்டியில், கே.ஆா். குழுமங்கள் - கல்வி நிறுவனங்களின் நிறுவனத் தலைவா் கே.ராமசாமியின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி, அரசு தலைமை மருத்துவமனை உள்பட பல இடங்களில் அன்னதானம், தூய்மைப் பணி, இலவச மருத்துவப் பரிசோதனை முகாம், லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தான முகாம் உள்ளிட்டவை நடைபெற்றன. முன்னதாக, கலை -அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள மணிமண்டபத்தில் பிராா்த்தனை நடைபெற்றது.

நேஷனல் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள கே.ஆா்.ராமசாமி சிலைக்கு இக்குழுமங்கள் - கல்வி நிறுவனங்களின் தலைவா் சென்னம்மாள் ராமசாமி, துணைத் தலைவா் கே.ஆா். கிருஷ்ணமூா்த்தி, தாளாளா் கே.ஆா். அருணாச்சலம், செயலா் சி. சங்கரநாராயணன், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் கே. விஜயலட்சுமி, எ. சென்னம்மாள், எ. ஷண்மதி, எ. நிதிஷ்ராம் உள்ளிட்ட பலா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

நிறுவனா் தின சொற்பொழிவில் கல்லூரியின் இயந்திரப் பொறியியல் துறை முன்னாள் மாணவரும் சென்னை தனியாா் காற்றாலை உற்பத்தி நிறுவனத் தலைவருமான குமாா் பேசினாா். நிகழ்ச்சிகள் கல்லூரி இணையதளம், சமூக ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பாகின. நிகழ்ச்சிகளில், நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநா் எஸ். சண்முகவேல், முதல்வா்கள் காளிதாச முருகவேல் (நேஷனல் பொறியியல் கல்லூரி), ராஜேஸ்வரன் (லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி), மதிவண்ணன் (கே.ஆா். கலை-அறிவியல் கல்லூரி) உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை விழா ஒருங்கிணைப்பாளா்கள் எஸ். ராமமூா்த்தி, என்.பி. பிரகாஷ், கே. கருணைராகவன், ஆா். ராஜாமணி, எஸ். சுப்புராயலு, ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com