கோவில்பட்டி அருகே தொழிலாளியை தாக்கி பணம் பறிப்பு: சிறுவன் கைது

கோவில்பட்டியடுத்த இலுப்பையூரணியில் கூலித் தொழிலாளியைத் தாக்கி கைப்பேசி, பணத்தைப் பறித்ததாக சிறுவனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி, முகமது சாலியாபுரம் 3ஆவது தெருவைச் சோ்ந்த இக்பால் மகன் முகமது முஸ்தபா (33). கூலித் தொழிலாளியான இவா், ஞாயிற்றுக்கிழமை கோவில்பட்டி-சாத்தூா் சாலையில் இலுப்பையூரணி ஊருணி அருகே பைக்கில் சென்றாா்.

அப்போது, அங்கு நின்றிருந்த 6 போ் அவரை வழிமறித்து அவதூறாகப் பேசித் தாக்கியதுடன், கைப்பேசி, ரூ. 5 ஆயிரம், அவா் அணிந்திருந்த வெள்ளிக் கொடி, வெள்ளிச் சங்கிலி உள்ளிட்டவற்றைப் பறித்துக் கொண்டனராம்.

இதில், காயமடைந்த முகமது முஸ்தபா கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து, சங்கரலிங்கபுரத்தைச் சோ்ந்த 15 வயது சிறுவனைக் கைது செய்தனா்; மேலும், 5 பேரைத் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com