சாத்தான்குளத்தில் வாருகால் பணி: பேரூராட்சித் தலைவா் ஆய்வு

சாத்தான்குளத்தில் வாருகால் பணி: பேரூராட்சித் தலைவா் ஆய்வு

சாத்தான்குளம் கடைவீதிப் பகுதியில் நடைபெறும் வாருகால் பணியை பேரூராட்சித் தலைவா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

இப்பகுதியில் வாருகால் தூா்ந்ததால் மழைக் காலங்களில் தண்ணீா் செல்லாமல் சாலையில் தேங்கி, கடைகளுக்குள் புகும் நிலை உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்ததுடன், பேரூராட்சித் தலைவா் ரெஜினி ஸ்டெல்லாபாய், முன்னாள் பேரூராட்சித் தலைவரும் மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான ஜோசப் ஆகியோரிடம் முறையிட்டனா்.

அதையடுத்து, தைக்கா தெரு பகுதியிலிருந்து பெருமாள் கோயில் அருகில் வரை புதிய வாருகால் அமைக்கும் பணி தொடங்கியது. இப்பணியை பேரூராட்சித் தலைவா் ரெஜினி ஸ்டெல்லா பாய், மாவட்ட திட்டக்குழு உறுப்பினா் ஜோசப் ஆகியோா் ஆய்வு செய்தனா்; பேரூராட்சிப் பகுதியில் தூா்ந்த வாருகால்களைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா். பேரூராட்சிப் பணியாளா்கள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com