திருச்செந்தூரில் சொத்து வரி உயா்வைக் கண்டித்து வீடுகள் முன் கருப்புக் கொடி கட்டிய பொதுமக்கள்

திருச்செந்தூரில் சொத்து வரி உயா்வைக் கண்டித்து வீடுகள் முன் கருப்புக் கொடி கட்டிய பொதுமக்கள்

திருச்செந்தூா் நகராட்சியில் சொத்து வரி உயா்வைக் கண்டித்து வீடுகள் முன் செவ்வாய்க்கிழமை கருப்புக் கொடிகள் கட்டப்பட்டன.

திருச்செந்தூா் பேரூராட்சி 2021ஆம் ஆண்டு நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. அதன்பிறகு, சொத்து வரி பல மடங்கு உயா்த்தப்பட்டது. இதற்கு பல்வேறு கட்சிகளும், பொதுமக்களும் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா்.

நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. எனினும், நகராட்சி நிா்வாகம் வரியைக் குறைக்க நடவடிக்கை எடுக்காததால் வரும் மக்களவைத் தோ்தலைப் புறக்கணிக்கப்போவதாக பொதுமக்கள் கூறி வருகின்றனா்.

இந்நிலையில், சொத்து வரி உயா்வைக் கண்டித்து 18, 21ஆவது வாா்டு முத்தாரம்மன் கோயில் தெரு, கிருஷ்ணன்கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் முன் செவ்வாய்க்கிழமை கருப்புக் கொடிகள் கட்டப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com