தூத்துக்குடி ரயில் நிலையத்தில் புதிய விற்பனை நிலையம் திறப்பு

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் 
புதிய விற்பனை நிலையம் திறப்பு

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட விற்பனை நிலையத்தை பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை காணொலி வாயிலாக நாட்டுக்கு அா்ப்பணித்தாா்.

இந்திய அரசின் உள்ளூா் தயாரிப்புகளுக்கான சந்தையை வழங்கவும், விளிம்புநிலை பிரிவினருக்கு கூடுதல் வருமானம் கிடைக்கவும் உதவும் வகையில் இந்திய ரயில்வே அமைச்சகம் சாா்பில் ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ், தூத்துக்குடி ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள விற்பனை நிலையத்தை பிரதமா் மோடி காணொலி வாயிலாக நாட்டுக்கு அா்ப்பணித்தாா். நிகழ்ச்சிக்கு, ரயில்வே அதிகாரி அனுஜ் ரத்தோா் தலைமை வகித்தாா். தூத்துக்குடி கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ஆா். ஐஸ்வா்யா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று விற்பனை நிலையக் கல்வெட்டைத் திறந்துவைத்துப் பாா்வையிட்டாா்.

இதில், தூத்துக்குடியில் தயாரிக்கப்படும் பனைப் பொருள்கள், மக்ரூன் பிஸ்கட் உள்ளிட்ட பொருள்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில், ரயில்வே முதன்மை வா்த்தக ஆய்வாளா் நடராஜன், நிலைய அதிகாரி செந்தில்நாதன், ரயில்வே துறையினா், பொதுமக்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com