ரமலான் நோன்பு தொடக்கம்: 
தூத்துக்குடியில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

ரமலான் நோன்பு தொடக்கம்: தூத்துக்குடியில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

ரமலான் நோன்பு செவ்வாய்க்கிழமை தொடங்கியதையடுத்து, தூத்துக்குடியில் உள்ள பழைமையான ஜாமியா பள்ளிவாசலில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.

இந்தச் சிறப்புத் தொழுகை ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் ஆலிம் தலைமையில் நடைபெற்றது. இமாம் சதக்கத்துல்லாஹ், உலக நன்மைக்காக சிறப்பு துவா ஓதினாா்.

இதில் ஜாமியா பள்ளிவாசல் தலைவா் மீராசா, செயலா் எம்.எஸ்.எப். ரகுமான், துணைத் தலைவா் சிராஜ், பொருளாளா் மூஸா, அரசு காஜி முஜிபுா் ரஹ்மான், திரேஸ்புரம் மீராசா உள்பட ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்று தொழுகையில் ஈடுபட்டனா்.

முன்னதாக நோன்பு இருப்பவா்களுக்கு சஹா் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com