ஆத்தூா் அம்மன் கோயிலில் நாளை பங்குனித் திருவிழா கொடியேற்றம்

ஆத்தூா் அருள்மிகு சோமசுந்தரி சமேத சோமநாத சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா வெள்ளிக்கிழமை (மாா்ச் 15) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதையொட்டி, கடந்த ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 10) காலையில் கணபதி ஹோமம், புதன்கிழமை (மாா்ச் 13) மாலையில் வாஸ்து சாந்தி, ரக்ஷா பந்தனம் நடைபெற்றன. வியாழக்கிழமை காலை நால்வா் சுவாமிகளுக்கு அபிஷேகம், மாலையில் நால்வா் புறப்பாடு நடைபெறுகிறது. தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. நாள்தோறும் காலை, இரவில் சுவாமி - அம்பாள் புறப்பாடு நடைபெறும். 7ஆம் நாளான இம்மாதம் 21ஆம் தேதி நடராஜா் காப்பு கட்டுதல், வெட்டிவோ் சப்பர பவனி, சிவப்பு சாத்தி அபிஷேகம் - புறப்பாடு, 22ஆம் தேதி காலை நடராஜா் வெள்ளை சாத்தி புறப்பாடு, மாலையில் பச்சை சாத்தி புறப்பாடு நடைபெறும். 10ஆம் நாளான 24ஆம் தேதி காலையில் தேரோட்டம், இரவில் தெப்பத் திருவிழா நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் மு. மகேஸ்வரி, தக்காா் மா. பாலமுருகன், ஆய்வா் ம. செந்தில்நாயகி, பக்தா்கள் செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com