வாக்காளா் விழிப்புணா்வு பேரணியை கொடியசைத்து தொடக்கி வைக்கிறாா் வட்டாட்சியா் சரவணப் பெருமாள்

கோவில்பட்டியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

கோவில்பட்டியில், வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. மக்களவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்த வேண்டும்.

18 வயது நிரம்பியோா் தங்களது பெயா்களை வாக்காளா் பட்டியலில் இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது. பயணியா் விடுதி முன் இப்பேரணியை வட்டாட்சியா் சரவணப்பெருமாள் தலைமை வகித்து கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா். துணை வட்டாட்சியா் வெள்ளத்துரை, உண்ணாமலை கலை-அறிவியல் கல்லூரி முதல்வா் சுப்புராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரணியில் இக்கல்லூரி மாணவா்கள் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி முழக்கமிட்டுச் சென்றனா். பேரணி பிரதான சாலை, மாதாங்கோயில் தெரு, எட்டயபுரம் சாலை வழியாக கோட்டாட்சியா் அலுவலகத்தில் முடிவடைந்தது. அங்கு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com