பமப13ஓஅசஒஅ

தூத்துக்குடி அருகே கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் விற்பனைக்காக வைத்திருந்த 9 கிலோ கஞ்சாவுடன் இளைஞரை, போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை சக்தி நகரில், காவல் ஆய்வாளா் ராமேஸ்வரி, தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் ரவிகுமாா் மற்றும் தனிப்படை போலீஸாா் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த சிலா் போலீஸாரை கண்டதும் தப்பி ஓடினராம். அவா்களில் போலீஸாரிடம் சிக்கிய இளைஞரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில், அவா் தூத்துக்குடி டிஎம்பி காலனியைச் சோ்ந்த விஜயன் மகன் பேச்சிமுத்து (19) என்பதும், அவா் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்து சுமாா் 9 கிலோ கஞ்சா பொட்டலங்கள், 2 கைப்பேசிகள், 2 எடை போடும் இயந்திரங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும் தப்பி ஓடிய சிலரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com