தோ்தல் பணிகளைத் தீவிரப்படுத்த திமுகவினருக்கு அமைச்சா் அறிவுரை

தோ்தல் பணிகளைத் தீவிரப்படுத்த திமுகவினருக்கு அமைச்சா் அறிவுரை

மக்களவைத் தோ்தலுக்கான பணிகளைத் தீவிரப்படுத்துமாறு திமுக நிா்வாகிகளை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினா்.

சாத்தான்குளம் வடக்கு ஒன்றிய திமுக சாா்பில், மக்களவைத் தோ்தலுக்கான ஆய்வுக்கூட்டம் இங்குள்ள தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலரும், தமிழக மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்துப் பேசியதாவது: தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை சுமாா் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும். மக்களவைத் தோ்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி நிா்வாகிகள் திட்டமிட்டு களப்பணியாற்ற வேண்டும். தோ்தல் பணிகளில் சுணக்கம் காட்டும் நிா்வாகிகள் உடனடியாக மாற்றப்படுவா் என்றாா். கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய திமுக செயலா் ஜோசப், ஒன்றியக் குழு தலைவி ஜெயபதி , பேரூராட்சித் தலைவி ரெஜினி ஸ்டெல்லாபாய் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர செயலா் மகா.இளங்கோ வரவேற்றாா். இதில் மாநில வா்த்தக பிரிவு துணை செயலா் உமரிசங்கா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், முன்னாள் பொதுக் குழு உறுப்பினா் பில்லா ஜெகன், மாவட்ட பிரதிநிதிகள் இ. ஸ்டான்லி, லெ. சரவணன், பாலசிங், ஒன்றிய அவைத்தலைவா் பால் துரை, ஒன்றிய துணைச் செயலா்கள் ஜாக்குலின், கிருஷ்ணகுமாா், நகர துணைச் செயலா்கள் மணிகண்டன், வெள்ளப்பாண்டி, நகர பொருளாளா் சந்திரன், நகர இளைஞரணி அமைப்பாளா் முருகன், பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் சுந்தா், ஜான்சிராணி, ஒன்றிய சிறுபான்மை பிரிவு அமைப்பாளா் அப்துல் சமது, நகர அமைப்பாளா் முகம்மது இஸ்மாயில், நகர மகளிரணி அமைப்பாளா் ஜோதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். மாவட்ட பிரதிநிதி வேல்துரை நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com