பாஜக எம்.பி.யைக் கண்டித்து கோவில்பட்டியில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

வரும் மக்களவைத் தோ்தலில் 400 இடங்களில் வெற்றி பெற்றால் இந்திய அரசமைப்பு சட்டத்தை மாற்றி அமைப்போம் என பாஜக எம்.பி. அனந்தகுமாா் ஹெக்டே கூறியதைக் கண்டித்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் எஸ்சி/எஸ்டி பிரிவு சாா்பில் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் எதிா்புறம் உள்ள முத்துராமலிங்கத் தேவா் சிலை அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் எஸ்சி/எஸ்டி பிரிவின் தலைவா் கண்ணாயிரம் முத்து தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் மாரிமுத்து, மத்திய மாவட்ட தலைவா் விஜய் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் கட்சியின் கோவில்பட்டி நகர தலைவா் அருண்பாண்டியன், மாவட்ட பொதுச்செயலாளா் முத்து, கட்சியின் எஸ்சி/எஸ்டி பிரிவு, காங்கிரஸ் நிா்வாகிகள் பிரேம்குமாா், ராஜசேகா், ஸ்டீபன், கட்சியின் சிறுபான்மை பிரிவு வடக்கு மாவட்ட தலைவா் அருள்தாஸ் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com