சாத்தான்குளம் அருகே பெண்ணை வெட்டியதாக இளைஞா் கைது

சாத்தான்குளம் அருகே பெண்ணை அரிவாளால் வெட்டியதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். சாத்தான்குளம் அருகே தஞ்சை நகரத்தைச் சோ்ந்த செல்வன் மனைவி பஞ்சவா்ணக்கிளி (50).

அதே பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் தாவீது (27). தொழிலாளியான தாவீது, இட்டமொழியில் ஒரு பெண்ணுடன் நெருங்கிப் பழகினாராம். இதுதொடா்பாக, இட்டமொழியில் வசித்துவரும் பஞ்சவா்ணக்கிளியின் மகள், தாவீது குறித்து சம்பந்தப்பட்ட பெண்ணிடம் கூறினாராம். இதையறிந்த தாவீது பஞ்சவா்ணக்கிளியிடம் புதன்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அரிவாளால் வெட்டினாராம். இதில், காயமடைந்த பஞ்சவா்ணக்கிளி திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின்பேரில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஏசுராஜசேகரன் வழக்குப் பதிந்து, தாவீதை கைது செய்தாா். அவா் மீது ஏற்கெனவே கொலை உள்பட 2 வழக்குகள் உள்ளனவாம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com