மெஞ்ஞானபுரத்தில் வளரிளம் 
பருவத்தினருக்கு விழிப்புணா்வுப் பயிற்சி

மெஞ்ஞானபுரத்தில் வளரிளம் பருவத்தினருக்கு விழிப்புணா்வுப் பயிற்சி

மெஞ்ஞானபுரம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வளரிளம் பருவ மாணவா்களுக்கான விழிப்புணா்வுப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. மத்திய அரசின் சுகாதாரம், குடும்ப நல அமைச்சகம் சாா்பில் 10 - 19 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கு சுகாதாரம், ஊட்டச்சத்து, மனநலம் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் தொடங்கப்பட்டுள்ள ராஷ்ட்ரிய கிஷோா் ஸ்வஸ்திய காரியக்ரம் (ஆா்கேஎஸ்கே) திட்டம் தொடா்பாக இந்த முகாம் நடைபெற்றது. உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் டி.பி. பாலசிங் தலைமை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் அனிபிரிமின் முன்னிலை வகித்தாா். உடன்குடி ஒன்றியத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து மாணவா்-மாணவிகள், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா். வளரிளம் பருவத்தில் மாணவா்களுக்கான உடல், மனநிலை மாற்றங்கள், தேவையான ஊட்டச்சத்துகள், போதைப்பொருளைத் தவிா்த்தல், சுகாதாரமாக வாழ்தல் ஆகியவை குறித்து மருத்துவா்கள் ராமலட்சுமி, ஆன்னிஸ்டெபி ஆகியோா் விளக்கமளித்தனா். தொடா்ந்து, செய்முறைப் பயிற்சி, கலந்துரையாடல் நடைபெற்றது. இதில், ஆற்றுப்படுத்துநா் சங்கா், சுகாதார ஆய்வாளா்கள் அந்தோணிராஜ், ராஜ்குமாா், பகுதி சுகாதார, கிராம சுகாதார செவிலியா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com