ஆறுமுகனேரியில் தெய்வீக சத்சங்க கூட்டம்

அருள்மிகு நடராஜ தேவார பஜனை ஆலயத்திற்கு சொந்தமான நந்தவனத்தில் தெய்வீக சத்சங்க கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆறுமுகனேரி-அடைக்கலாபுரம் சாலையில் அமைந்துள்ள லட்சுமிமாநகரம் அருள்மிகு நடராஜ தேவார பஜனை ஆலயத்திற்கு சொந்தமான நந்தவனத்தில் தெய்வீக சத்சங்க கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. பஜனை ஆலய செயலாளா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். ஜோதிடா் ஆா்.வேலாயுதம் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக ஸ்பிக் ஓய்வு பெற்ற அதிகாரியும் பண்பாட்டு வகுப்பு ஆசிரியருமான ஜெயராஜ் கலந்து கொண்டு ஆன்மிக சந்தேகங்களுக்கு விளக்கமளித்தாா். ஓய்வு பெற்ற பேராசிரியா் அ.அசோக்குமாா், ஆா்.எஸ்.எஸ் அமைப்பைச் சோ்ந்த வெ.பழனிராஜ், ம.சிவராமன், சுரேஷ், பாஜகவைச் சோ்ந்த லிங்கதாஸ், ஸ்.காா்த்திகேயன், பவுல்ராஜ், திருமால், சைவ சித்தாந்த கழகத்தைச் சோ்ந்த சுப்பிரமணியபிள்ளை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com