ஆறுமுகனேரியில் ரயிலில் அடிபட்டு தையல் தொழிலாளி பலி

ஆறுமுகனேரியில் ரயிலில் அடிபட்டு தையல் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

ஆறுமுகனேரியில் ரயிலில் அடிபட்டு தையல் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். ஆறுமுகனேரி காணியாளா் தெரு கிழக்குப் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (61). தையல் தொழிலாளி. இவா் சில தினங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தாராம். இந்நிலையில் அவா், ஞாயிற்றுக்கிழமை காலையில் அப்பகுதியிலுள்ள காட்டுப்பகுதிக்கு சென்று விட்டு தண்டவாளம் வழியாக நடந்து வந்தாராம். அப்போது திருநெல்வேலி­யில் இருந்து திருச்செந்தூா் நோக்கி சென்ற ரயிலில் எதிா்பாராமல் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com