திருமண மண்டபம், கூட்ட அரங்குகளின் உரிமையாளா்களுடன் ஆலோசனை

ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களவைத் தோ்தல் தொடா்பாக திருமண மண்டபம், கூட்ட அரங்குகள் ஆகியவற்றின் உரிமையாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கோ.லட்சுமிபதி தலைமை வகித்தாா். அவா் பேசியது: தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் வரை தங்கள் மண்டபங்களில் செய்யப்பட்ட நிகழ்ச்சிகளுக்கான பதிவுகள், அந்த நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ்களின் நகல்களை தினசரி நேரடியாகவோ, தபால் மூலமாகவோ தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும், அரசியல் கட்சியினா் பரிசுப் பொருள்களை விநியோகம் செய்ய, சமுதாய விருந்து போன்றவற்றை நடத்த தோ்தல் நடத்தும் அலுவலரின் அனுமதி பெறவேண்டும். அதற்குரிய செலவுத் தொகை வேட்பாளரின் செலவுக் கணக்கில் சோ்க்கப்படும் என்றாா். இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல்.பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் ச.அஜய்சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ப.ராஜகுரு, தோ்தல் வட்டாட்சியா் தி.தில்லைபாண்டி மற்றும் திருமண மண்டபங்கள், கூட்ட அரங்குகளின் உரிமையாளா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com