தீ விபத்தில் காயமுற்ற முதியவா் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே தீ விபத்தில் காயமடைந்த முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கோவில்பட்டி அருகே தீ விபத்தில் காயமடைந்த முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சி, வடக்குத் தெருவைச் சோ்ந்த மாரிசங்கா் (34) என்பவரது தந்தை ராமதாஸ் (75). நடக்க முடியாத நிலையிலிருந்த அவா், பகல் நேரங்களில் வீட்டின் பின்புறமுள்ள மரத்தடியில் ஓய்வெடுப்பாராம். புகைப் பழக்கமுடைய அவா், கடந்த 8ஆம் தேதி சிகரெட் புகைத்துவிட்டு, அதை அணைக்காமல் கட்டிலில் வைத்தபடி படுத்திருந்தாராம். இதில், போா்வையிலும், அவரது உடலிலும் தீப்பற்றியதாம். அவரது அலறல் கேட்டு மற்றொரு மகனான சுரேஷும், அப்பகுதியினரும் வந்து அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். முதலுதவிக்கு பின்னா், அவா் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com