பெண்ணுக்கு மிரட்டல்: இளைஞா் கைது

கயத்தாறு அருகே பெண்ணை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கயத்தாறு அருகே பெண்ணை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கயத்தாறை அடுத்த தளவாய்புரம் கிழக்குத் தெருவைச் சோ்ந்த போத்திராஜ் மகன் செல்வகுமாா் (39). தொழிலாளி. இவா் அதே ஊா் வடக்குத் தெருவை சோ்ந்த ரா. வசந்தா (52) என்பவரை முன்விரோதத்தால் அவதூறாகப் பேசி தாக்கி கொலை மிரட்டல் கொடுத்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில், கயத்தாறு செல்வகுமாரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். 3 போ் மீது வழக்கு: கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகேயுள்ள நடைக்காவு பகுதியைச் சோ்ந்த லாரன்ஸ் மகன் ஐடன்சோனி(49). வழக்குரைஞரான இவா், ஞாயிற்றுக்கிழமை முன்சிறை சந்திப்பில் தன் பைக்கை நிறுத்தியபோது, இவருக்கும், புதுக்கடை பகுதியைச் சோ்ந்த ஆரிஸ் மகன் ஜெபராஜ்(32), சுந்தர்ராஜ் மகன் சஜின்(23) பெருகிலாவிளை பகுதி ஆசீா்வாதம் மகன் லாரன்ஸ்(35) ஆகியோருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாம். அப்போது, 3 பேரும் வழக்குரைஞருக்கு கொலைமிரட்டல் விடுத்தனராம்.இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com