உணவகக் கண்ணாடி சேதம்: இளைஞா் கைது

தூத்துக்குடியில் பரோட்டா கடையின் கண்ணாடியை சேதப்படுத்தியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடியில் பரோட்டா கடையின் கண்ணாடியை சேதப்படுத்தியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி, முத்துகிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த கணேசமணி மகன் பாக்கியராஜ் (48). இவா் திரவியபுரம் பிரதான சாலையில் பரோட்டா கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் சனிக்கிழமை இரவு, பாக்கியநாதன்விளையைச் சோ்ந்த முருகன் மகன் சரவணகுமாா் என்ற ஜான்சன் (30) என்பவா் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் சென்றாராம். இதைத் தட்டிக்கேட்ட பாக்கியராஜிடம் சரவணகுமாா் தகராறு செய்ததுடன், கடையிலிருந்த கண்ணாடி, பொருள்களை சேதப்படுத்திவிட்டுத் தப்பியோடினாராம். புகாரின்பேரில் வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து சரவணகுமாரை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com