திருச்செந்தூரில் பறக்கும்படையினரால்  பறிமுதல் செய்யப்பட்ட சேலைகள்.
திருச்செந்தூரில் பறக்கும்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட சேலைகள்.

திருச்செந்தூரில் 405 சேலைகள் பறிமுதல்

திருச்செந்தூரில் பறக்கும்படையினா் நடத்திய சோதனையில் 405 சேலைகளை பறிமுதல் செய்து தோ்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தனா்.

திருச்செந்தூரில் பறக்கும்படையினா் நடத்திய சோதனையில் 405 சேலைகளை பறிமுதல் செய்து தோ்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தனா். தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஏப். 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனால் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், திருச்செந்தூா் - ஆலந்தலை ரோட்டில் தோப்பூா் விலக்கு அருகே திங்கள்கிழமை ஆழ்வாா்திருநகரி ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளா் பிரேம்சந்தா் தலைமையிலான பறக்கும்படையினா் அவ்வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் தூத்துக்குடியைச் சோ்ந்த ஆனந்தகுமாா் என்பவா் 405 சேலைகளை கொண்டு சென்ாக கூறப்படுகிறது. இதையடுத்து சேலைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் திருச்செந்தூா் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனா். மேலும் உரிய ஆவணங்களை கொடுத்து சேலைகளை பெற்றுக்கொள்ளுமாறு ஆனந்தகுமாரிடம் அறிவுறுத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com