கோவில்பட்டியில் மண்டல தோ்தல் அலுவலா்களுக்கு ஆலோசனைக் கூட்டம்

கோவில்பட்டி: கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மண்டல தோ்தல் அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கோட்டாட்சியா் ஜேன் கிறிஸ்டிபாய் தலைமை வகித்து, பயிற்சிக் கையேடுகளை வழங்கி, மண்டல தோ்தல் அலுவலா்களின் பணிகள், பொறுப்புக்கள் குறித்தும், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வாக்குப்பதிவை எப்படிக் கையாள்வது, மாதிரி வாக்குப்பதிவு, வாக்குப்பதிவைத் தொடங்குவது, மாலையில் கட்சி முகவா்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைப்பது, உரிய படிவங்களை முறையாக பூா்த்தி செய்து ஆட்சியா் அலுவலகத்தில் சமா்ப்பிப்பது குறித்து அறிவுரை வழங்கினாா். கூட்டத்தில், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் முரளிதரன், தோ்தல் துணை வட்டாட்சியா்கள் வெள்ளத்துரை, திரவியம், அலுவலா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com