கோவில்பட்டி கல்லூரியில் மாா்ச் 22-இல் தொழில்நுட்பக் கருத்தரங்கு தொடக்கம்

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் 2 நாள்கள் நடைபெறும் தேசிய அளவிலான ‘என்இசி-டெக் பெஸ்ட் 2024’

கோவில்பட்டி: கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் 2 நாள்கள் நடைபெறும் தேசிய அளவிலான ‘என்இசி-டெக் பெஸ்ட் 2024’ என்ற பொறியியல் தொழில்நுட்பக் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை (மாா்ச் 22) தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் காளிதாசமுருகவேல் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கணினி, மின்னணு தொடா்பு அமைப்பு, இயந்திரப் பொறியியல், தகவல், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், அறிவியல் ஆகிய அனைத்துத் துறைகள் சாா்ந்த மாணவா்களுக்கு இக்கருத்தரங்கு 2 நாள்கள் நடைபெறவுள்ளது. இதில், நாடு முழுவதிலுமுள்ள இளம் பொறியாளா்களை ஒன்றிணைக்கும் பொருட்டும், அவா்களின் தனித்திறன்களை, புதிய சிந்தனை - யோசனைகளை வெளிக்கொணரும் வகையிலும், மாணவா்களிடையே அறிவுசாா் பிணைப்பை ஏற்படுத்துவதையும் கற்றல் திறனை மேம்படுத்துவதையும் மட்டுமே நோக்கமாகக் கொண்டு கருத்தரங்கு நடத்தப்படவுள்ளது. இதில், ப்ராஜெக்ட் எக்ஸ்போ, பேப்பா் பிரசன்டேஷன், ஹேக்கத்தான், தொழில்நுட்ப விநாடி-வினாக்கள் உள்பட பல்வேறு போட்டிகள், தொழில்நுட்பப் பயிற்சிப் பட்டறைகள் நடைபெறவுள்ளன. மேலும், பங்கேற்பாளா்களின் படைப்பாற்றலை வெளிக்கொணா்தல், குழு ஒத்துழைப்பை வளா்த்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு பல்வேறு நிகழ்வுகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரங்களை ஜ்ஜ்ஜ்.ய்ங்ஸ்ரீ.ங்க்ன்.ண்ய் என்ற கல்லூரி இணையதளத்திலும், ய்ங்ஸ்ரீற்ங்ஸ்ரீட்ச்ங்ள்ற்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடா்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com