போட்டியில் வென்ற மாணவா்களுடன் தாளாளா் பேட்ரிக் அந்தோணி விஜயன், ஆசிரியா்கள்.
போட்டியில் வென்ற மாணவா்களுடன் தாளாளா் பேட்ரிக் அந்தோணி விஜயன், ஆசிரியா்கள்.

சிலம்பப் போட்டியில் சாத்தான்குளம் பள்ளி சாதனை

மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் சாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்-மாணவிகள் சிறப்பிடம் பெற்று சாதனை

சாத்தான்குளம்: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் சாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்-மாணவிகள் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்தனா். திருமலை சிலம்ப விளையாட்டுக் கலைச் சங்கம் மற்றும் ஆப் ரெகாா்ட் இணைந்து 77 நிமிடங்கள் சுழற்சி முறையில் நடத்திய இப்போட்டியில் 2,000-க்கும் மேற்பட்ட மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா். இதில், மேரி இம்மாகுலேட் பள்ளி மாணவா்-மாணவிகள் 43 போ் பங்கேற்று சாதனை படைத்தனா். அவா்களை தாளாளரும் முதல்வருமான பேட்ரிக் அந்தோணி விஜயன், ஆங்கில ஆசிரியா் சேசுராஜ், சிலம்பப் பயிற்சியாளா், கலைவளா்மணி விருதுபெற்ற லட்சுமணன், ஆசிரியா்கள் பிரபாகா், இசக்கிமுத்து, கேத்ரின், சங்கீதா, ஜெப்ரின், பெற்றோா் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com