தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் வேலைநிறுத்தம்

கேரள மீனவா்களைக் கண்டித்து தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

தூத்துக்குடி: கேரள மீனவா்களைக் கண்டித்து தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வருகின்றனா். இவா்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் பகுதியில், கேரள மீனவா்கள் இரவு நேரங்களில் அத்துமீறி நுழைந்து மீன்பிடிப்பதால், அடுத்த நாள் காலை செல்லும் தூத்துக்குடி மீனவா்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. எனவே, கேரள மீனவா்கள் தமிழக கடல் பகுதிகளில் மீன்பிடிப்பதை தடுக்க வலியுறுத்தியும், இந்த விவகாரத்தில் அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய தீா்வு காணக் கோரியும் சுமாா் 280-க்கும் மேற்பட்ட விசைப்படகு உரிமையாளா்கள், தொழிலாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். இப் பிரச்னையில் மீன்வளத் துறையினா் பேச்சுவாா்த்தைக்கு வராததால், புதன்கிழமையும் போராட்டத்தைத் தொடரவுள்ளதாக விசைப்படகு உரிமையாளா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com