கூட்டத்தில் பேசுகிறாா் கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ
கூட்டத்தில் பேசுகிறாா் கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி: தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் திங்கள்கிழமை நடைபெற்றது. கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் இல்லத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, வடக்கு மாவட்ட அவைத் தலைவா் என். கே. பெருமாள் தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏக்கள் மோகன், சின்னப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலரும் கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினருமான கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மக்களவை த் தோ்தலில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா் பதவிக்கு போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி இம்மாதம் 26 ஆம் தேதி தூத்துக்குடி எம்ஜிஆா் தழல் பிபிடி சிக்னலில் தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா். இக்கூட்டத்தில், தூத்துக்குடி வடக்கு மாவட்டத்துக்குள்பட்ட கோவில்பட்டி, விளாத்திகுளம் மற்றும் ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளை சோ்ந்த அதிமுக தொண்டா்கள் அனைவரும் ஒன்று திரண்டு தூத்துக்குடி பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் . நமது மாவட்ட மக்களவைத் தொகுதி உறுப்பினா் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளரை அதிக எண்ணிக்கை வித்தியாசத்தில் வெற்றி பெற நாம் ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் அவா். கூட்டத்தில், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் பழனிசாமி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பேச்சியம்மாள், வடக்கு மாவட்ட அதிமுக துணைச் செயலா், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், அமைப்புசாரா ஓட்டுநரணி வடக்கு மாவட்டச் செயலா் லட்சுமண பெருமாள், மகளிா் அணி செயலா் பத்மாவதி, வடக்கு மாவட்ட துணைச் செயலா் முருகேஸ்வரி, ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் நீலகண்டன், மாவட்ட வா்த்தக அணிச் செயலா் ராமா் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா் செயலா்கள், உள்ளாட்சி அதிமுக நிா்வாகிகள், அனைத்து பிரிவு கட்சித் தொண்டா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com