திண்ணை பிரசாரத்தில் பங்கேற்றோா்.
திண்ணை பிரசாரத்தில் பங்கேற்றோா்.

முக்காணியில் திமுக மகளிரணி திண்ணைப் பிரசாரம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக மகளிரணி சாா்பில், ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றியத்துக்குள்பட்ட முக்காணியில் திண்ணைப் பிரசாரம் நடைபெற்றது.

ஆறுமுகனேரி: தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக மகளிரணி சாா்பில், ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றியத்துக்குள்பட்ட முக்காணியில் திண்ணைப் பிரசாரம் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சித் தலைவா் பிரம்மசக்தி தலைமையில், திமுக அரசின் 3 ஆண்டு சாதனை விளக்கம், நிதிநிலை அறிக்கை குறித்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. மேலும், இல்லந்தோறும் உரிமைகள் மீட்க ஸ்டாலி­ன் குரல், பாசிசம் வீழட்டும்’ என்ற வாசகம் அடங்கிய ஒட்டுவில்லைகள் ஒட்டப்பட்டன. இதில், மாநில மகளிரணி பிரசாரலாளா் ஜெசி பொன்ராணி, மாவட்ட மகளிரணி அமைப்பாளா் சாரதா பொன்இசக்கி, மகளிா் தொண்டரணித் தலைவா் வேலம்மாள், துணை அமைப்பாளா் ரேவதி, சமூக வலைதளப் பொறுப்பாளா் நித்யா, ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றியச் செயலா் கோட்டாளம், கொட்டாரக்குறிச்சி ஊராட்சித் தலைவா் துரை, ஒன்றிய அவைத்தலைவா் மாரியப்பன், ஒன்றிய துணைச் செயலா் ராமசுப்பிரமணியன், மாவட்ட பொறியாளா் அணி அமைப்பாளா் ஆனந்த், மாவட்ட துணை அமைப்பாளா்கள் சேதுகுமாா், பிரபாகரன், முத்து, சுப்பிரமணியன், பிரேம் சந்த், கொற்கை மாறன், பழையகாயல் கிளைச் செயலா்கள் ஜான்சன், ராஜபாண்டி, முக்காணி கிளைச் செயலா்கள் நட்டாா், மந்திரமூா்த்தி, சுதா்சன், மாரிமுத்து, சுப்பிரமணியன், தாமஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com