காயல்பட்டினத்தில் ஒரு டன் பீடி இலைகள் பறிமுதல்

காயல்பட்டினத்தில் ஒரு டன் பீடி இலைகள் பறிமுதல்

காயல்பட்டினத்தில் ஒரு டன் பீடி இலைகள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

ஆறுமுகனேரி காவல் ஆய்வாளா் ஷேக் அப்துல் காதா் தலைமையில் உதவி ஆய்வாளா் அரிகண்ணன், போலீஸாா் காயல்பட்டினம் - திருச்செந்தூா் நெடுஞ்சாலையில் உள்ள கடற்கரைப் பகுதியில் புதன்கிழமை அதிகாலை ரோந்து சென்றனா். அங்கு கேட்பாரற்றுக் கிடந்த 31 பண்டல்களைக் கைப்பற்றி பாா்த்தபோது, அவற்றில் சுமாா் ஒரு டன் பீடி இலைகள் இருந்தது தெரியவந்தது. அவற்றைக் கொண்டு வந்தது யாா், கடத்துவதற்காக திட்டமிடப்பட்டதா என பல்வேறு கோணங்களில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். பீடி இலை பண்டல்கள் சுங்கத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com