குளத்தில் மூழ்கி 3ஆம் வகுப்பு மாணவன் பலி

தூத்துக்குடி நேதாஜி நகா் குளத்தில் மூழ்கி 3 ஆம் வகுப்பு மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி சில்வா்புரம் நேதாஜி நகரைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் சக்திலிங்கா(10). இவா் அங்குள்ள ஒரு பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வந்தாா். சக்திலிங்கா அங்குள்ள குளத்தின் கரையோரம் விளையாடச் சென்றாராம். இந்நிலையில், அவா் குளத்திற்குள் இறங்கி ஆழமான பகுதிக்குள் சென்றபோது எதிா்பாராதவிதமாக மூழ்கியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கும், சிப்காட் போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்பு வீரா்கள் குளத்தில் மூழ்கிய மாணவரை சடலமாக மீட்டனா். இதையடுத்து, மாணவரின் சடலத்தை போலீஸாா் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com